கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

இந்தியாவுக்கு 30ஆவது பதக்கம்: 400 மீ. தடகளத்தில் வெண்கலம் வென்ற வீராங்கனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடகளத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை குறித்து...

Prachi Choudhary

பிராச்சி சௌத்ரி - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 400 மீ. தடகளத்தில் இந்திய வீராங்கனை பிராச்சி சௌத்ரி வெண்கலம் வென்று அசத்தினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் மகளிருக்கான 400 மீ. தடகளத்தில் இந்திய வீராங்கனை பிராச்சி சௌத்ரி நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அதில் 53.21 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து அசத்தினார்.

இந்தப் பிரிவில் பஹ்ரைனின் வீராங்கனை சல்வா ஈத் நாஸர் 49.20 நொடிகளில் சாதனையுடன் கடந்து தங்கம் வென்றார். ஈரானைச் சேர்ந்த வீராங்கனை ஜஹ்ரா ஜெராய் மனோஜன் 52.38 நொடிகளில் வெள்ளி வென்றார்.

இந்தப் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீராங்கனை கிரண் பஹால் 53.41 நொடிகளில் கடந்து ஐந்தாம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

பிராச்சி சௌத்ரியின் இந்த வெற்றியுடன் இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 4 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் கிடைத்துள்ளன.

Summary

Prachi Choudhary Win Bronze In Women's 400m For India At Asian Games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.