
ஆசிய விளையாட்டில் 20ஆவது பதக்கம்: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கௌர் வெண்கலம் வென்றது குறித்து...

இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கௌர் - படம்: எக்ஸ் / ஆல் இந்தியா ரேடியோ
ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் பிரிவில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கௌர் வெண்கலம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
குண்டு எறிதலில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கௌர் (36 வயது) ஒவ்வொரு வாய்ப்பிலும் தனது தூரத்தை அதிகப்படுத்திக்கொண்டே வந்தார்.
முதல் மூன்று வாய்ப்புகளில் 16.32, 16.41, 16.80 மீட்டருக்கு குண்டு எறிந்தார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 17.17 மீட்டருக்கு குண்டு எறிந்தார். ஐந்தாம் வாய்ப்பில் 16.75 மீட்டரும் கடைசி வாய்ப்பில் ஃபௌல் செய்தும் சொதப்பியதால், 17.17 உடன் வெண்கலம் வென்றார்.
தங்கம் மற்றும் வெள்ளி முறையே சீன வீராங்கனைகள் வென்று அசத்தினார்கள். சாங் ஜியாயுவான் 19.08 மீட்டருக்கு குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தையும் லின்று ஜாங்க் 18.14 மீட்டருக்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்கள்.
மற்றுமொரு இந்திய வீராங்கனையான கிருஷ்ணா ஜெய்ஷங்கர் 16.57 மீட்டருக்கு குண்டு எறிந்து ஐந்தாம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
இதுவரை இந்திய அணி 2 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது. கபடி மற்றும் ஸ்குவாஷ் பிரிவுகளில் தலா 2 என நான்கு பதக்கங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ð¥ BRONZE FOR MANPREET KAUR! ð®ð³ð¥
— Athletics Federation of India (@afiindia) September 25, 2026
She opened with 16.32m, then got better and better: 16.41 â¡ï¸ 16.80 â¡ï¸ 17.17m ðª
Every round she found more, and she held the bronze position under pressure right to the last throw.
An Asian Games medal in the Women's Shot Put for India! ð⦠pic.twitter.com/NwUTH6aWp0
Summary
Asian Games 2026: Manpreet Kaur wins bronze medal in Women's Shotput with best attempt of 17.17m
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







