தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைவண்டலூர் சிறுமி வல்லுறவு! காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? இபிஎஸ் கேள்வி! ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

வண்டலூர் அரசுப் பள்ளியில் கூட்டு பாலியல் வன்கொடுமை? தாம்பரம் காவல்துறை விளக்கம்

வண்டலூர் அரசுப் பள்ளியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து தாம்பரம் காவல்துறை விளக்கம்

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Published On :

வண்டலூர் அருகே, அரசுப் பள்ளியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் குறித்து தாம்பரம் காவல்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து தாம்பரம் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது.

புகார் கிடைத்ததும், உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது. தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட் விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும். இதுவரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி. சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER