தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைவண்டலூர் சிறுமி வல்லுறவு! காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? இபிஎஸ் கேள்வி! ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

வண்டலூர் சிறுமி வல்லுறவு! காவல்துறை செயல்படும் லட்சணம் இதுதானா? இபிஎஸ் கேள்வி!

வண்டலூர் சிறுமி கூட்டு வல்லுறவு செய்யப்பட்ட விவகாரத்தில் இபிஎஸ் கேள்வி...

EPS speaks in ADMK meeting

இபிஎஸ் - ENS

Published On :

வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது:

“சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளிக்குள் மர்ம நபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “டெலிட்” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

முதல்வர் விஜய் - உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா?

அரசுப் பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “பொய்ச் செய்தி” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாஃபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?

முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் வழக்குகள் என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?

பணக்கார முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச - பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.

வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Vandalur girl rape case! Is this the way the police function - EPS questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.