அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்: 10 எடிஷனில் 9 முறை சாம்பியன் ஆகியிருக்கும் ஆடவர் கபடி அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கபடி அணி தங்கம் வென்றது குறித்து...

Indian men's kabaddi team

இந்திய ஆடவர் கபடி அணி - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் மற்றும் ஆடவர் கபடி அணிகள் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஆடவருக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஈரான் அணியும் மோதின. இதில் இந்தியா 40-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வென்றது.

முதல் பாதியில் ஈரான் 18-17 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியது. பின்னர், ஒரு கட்டத்தில் முன்னிலை வகித்த இந்திய அணி தடுப்பாட்டத்தில் அசத்தி த்ரில் வெற்றி பெற்றது.

மொத்தமாக 10 எடிஷனில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணி 9 முறை தங்கம் வென்றுள்ளது. 1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014, 2018, 2022, 2026 ஆகிய எடிஷன்களில் 2018ல் மட்டுமே தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக, இந்தியா ஆசிய விளையாட்டில் இதுவரை 4 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஸ்குவாஷ் பிரிவில் இரண்டு இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Summary

India's 4th Gold in Asian games 2026: Men's Kabaddi team wins medal with a stellar defensive performance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.