நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்: இறுதிப் போட்டியில் மகளிர் கபடி அணி த்ரில் வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது குறித்து...

Indian women's kabaddi team rejoicing in victory.

வெற்றிக் களிப்பில் இந்திய மகளிர் கபடி அணி - படம்: எக்ஸ் / ஆல் இந்திய ரேடியோ நியூஸ்

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது அசத்தியுள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கம் இந்த ஆசிய விளையாட்டில் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மகளிர் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஈரான் மகளிரணி உடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 37-34 என்ற புள்ளிகளில் வென்றது. வெறுமனே 4 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 22-16 என்ற புள்ளிகள் பெற்றன. இரண்டாம் பாதியில் ஈரான் அணி மிகுந்த சவாலை அளித்தது.

இதுவரை ஐந்து முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக தங்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

இதுவரை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 27 பதக்கங்களை வென்றுள்ளது.

Summary

Asian Games 2026: India's third gold: Women's kabaddi team shines!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.