தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைவண்டலூர் சிறுமி வல்லுறவு! காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? இபிஎஸ் கேள்வி! ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

தோல்வியே காணாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கபடி அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதியில் வென்ற இந்திய மகளிர் கபடி அணி குறித்து...

Indian women's kabaddi team

இந்திய மகளிர் கபடி அணி - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டி அரையிறுதியில் நேபாளத்தை மகளிரணியை 48-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் கபடி அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி இதுவரை 2 தங்கம் மட்டுமே வென்றுள்ள நிலையில், மூன்றாவது தங்கம் வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடப்பு சாம்பியனனான இந்திய மகளிரணி ஒரு போட்டியிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முதல் பாதியில் இந்திய அணி 31-17 என முன்னிலை வகித்தது. இதில் 4 ஆல் அவுட், 4 போனஸ் புள்ளிகளையும் பெற்றன. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 48 புள்ளிகள் பெற்று அசத்தின.

இந்தப் போட்டியில் இந்திய அணி ஆல் அவுட் செய்ததன் மூலமாக 6 புள்ளிகளும் எதிரணியை அவுட் செய்ததன் மூலமாக 35 புள்ளிகளும் போன்ஸ் மூலமாக 7 புள்ளிகளும் பெற்றன.

முன்னதாக குரூப் சுற்றுகளில் இந்திய மகளிரணி ஈரான், வங்கதேசம், ஜப்பான் அணிகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian women’s kabaddi team sails into Asian Games final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.