ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!

ஆசிய விளையாட்டில் காலிறுதியில் மோதும் இந்திய வீராங்கனைகள்..! ஒரு பதக்கம் உறுதியானது!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதியில் மோதிக்கொள்ளும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் குறித்து...

Indian female players to face each other in the quarter-finals.

காலிறுதியில் மோதும் இந்திய வீராங்கனைகள் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா.

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் மகளிருக்கான பிரிவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் காலிறுதியில் மோதவிருக்கிறார்கள். இதனால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 1 தங்கம் உள்பட மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிர் ஸ்குவாஷ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், சிங்கப்பூரின் அவு யோங் வை லினனை 11–4, 11–5, 11–7 என 3-0 என்ற கேம்களில் வென்றார்.

மற்றுமொரு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் தன்வி கண்ணா சிங்கப்பூரின் ஆவ் யோங் வாய் யான்னை 5-11, 11-4, 11-5, 13-11 என 3-1 என்ற கேம்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் சகோதரிகளை வென்ற இந்திய வீராங்கனைகள் அனாஹத் சிங் - தன்வி கண்ணா காலிறுதியில் மோதவிருக்கிறார்கள். இதனால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

18 வயதான அனாஹத் சிங், 30 வயதான தன்வி கண்னாவும் தேசிய அளவில் பலமுறை நேருக்கு நேர் விளையாடி இருக்கிறார்கள். கடைசியாக ஜேஎஸ்டபிள்யூ இந்தியன் ஓபனில் அனாஹத் சிங் 3-1 என தன்வியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Anahat Singh and Tanvi Khanna set up all-India quarters to guarantee a medal at Asian Games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.