எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்

செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்!

செல்போனுக்கு மாற்றாக, மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம் பார்க்கப்படுகிறது.

மியூஸ் சார்ம்

மியூஸ் சார்ம் - meta

Published On :

மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளங்கை அளவுள்ள மியூஸ் சார்ம் ஏஐ சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது கிட்டத்தட்ட செல்போனுக்கு மாற்றாக வந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

மெட்டா கனெக்ட் நிகழ்வில், மார்க் ஜுக்கர்பெர்க் 'மியூஸ் சார்ம்' என்ற சிறிய சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இதுவரை கையில் செல்போனை வைத்துக் கொண்டு அதில் செய்யறிவின் உதவியோடு நாம் செய்து வந்த வேலைகளை இனி இந்த மியூஸ் செய்யுமாம்.

இது பல வடிவங்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது கையில் வைத்திருப்பவர்களைப் பார்த்து அசையும், நம்மைப் பார்த்து கையசைக்கும், விலங்கு, விண்வெளி வீரர் என அழகழகான அவதாரங்களைக் கொண்ட, தனிப்பயனாக்கக்கூடிய ஓஎல்இடி திரையுடன் வருகிறது.

மெட்டாவின் மியூஸ் ஏஐ (Muse AI) மூலம் குரல்வழி உரையாடல்களையும் இந்த மியூஸ் மேற்கொள்ளும். விடியோ பார்க்கலாம், பயணங்களை முன்பதிவு செய்ய உதவும். மின்னஞ்சல் அனுப்பும் பணிகளைக் கையாளும்.

இதில் 5ஜி இணையம், கேமரா மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை உள்ளன.

விடுமுறைக்காலத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் இந்த மியூஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைபேசிகள் அல்லது டேப் போன்றவற்றுக்கு மாற்றாக வந்திருக்கின்றன. ஒரு வேடிக்கையான, எப்போதும் தயாராக இருக்கும் தோழனாக கையில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கீ செயின் போல மாட்டிக் கொள்ளலாம்.

மேலும், மெட்டாவின் ஆய்வகத்திலிருந்து வரும் புதிய விளையாட்டுத்தனமான சாதனங்களில், செய்யறிவையும் பயன்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த மியூஸ் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, உங்கள் தனிப்பட்ட உதவியாளரான 'மியூஸ்' (Muse) இப்போது குரல் மற்றும் நிகழ்நேர (real-time) வீடியோ வசதிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட நேரம் உரையாடலாம்; அதே வேளையில், மியூஸ் பின்னணியில் இயங்கி உங்களுக்கான பணிகளைச் செய்து முடிக்கும். நாள் முழுவதும் கைகளைப் பயன்படுத்தாமலேயே (hands-free) உரையாடும் வகையில், மியூஸை 'ஸ்மார்ட் கண்ணாடிகளிலும்' (smart glasses) நாங்கள் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER