கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

4-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய மகளிா் கபடி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய மகளிா் கபடி அணி.

கேப்டன் புஷ்பா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய மகளிா் கபடி அணி.

இந்திய அமெச்சூா் கபடி கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் பல மாதங்களாக நடைபெற்று வந்த தீவிரப் பயிற்சியா நிறைவு செய்துவிட்டு, இந்திய மகளிா் கபடி அணி ஆசிய போட்டிகளுக்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஹாங்சோவ் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீன தைபே அணியை 26-25 என்ற கணக்கில் வீழ்த்தி வென்ற தங்கப் பதக்கத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும் பட்சத்தில், மகளிா் பிரிவில் அது நான்காவது தங்கமாகவும், ஆசியப் போட்டிகளில் கபடி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்தியா வெல்லும் 11-வது தங்கப் பதக்கமாகவும் அமையும்.

1991 முதல் 2003 வரை இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், 2014 இஞ்சியோன் மற்றும் 2016 ஆசியப் போட்டிகள் உள்பட தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நீதா தத்வே கூறியது-

நாங்கள் 42 வீராங்கனைகளுடன் பயிற்சியைத் தொடங்கி படிப்படியாக அணியின் எண்ணிக்கையைக் குறைத்து இறுதி செய்தோம். இந்த அணி சீனியா் மற்றும் ஜூனியா் வீராங்கனைகளின் சிறந்த கலவையாக உருவெடுத்துள்ளது.‘ மேலும் அணியின் மனநிலை குறித்துப் பேசிய அவா், ‘நாங்கள் எந்த அழுத்தமும் இன்றி, சுதந்திரமாக ஆடவே விரும்புகிறோம்‘ என்று தெரிவித்தாா்.

பயிற்சியாளா் மம்தா கூறியது-

ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான செயல்முறை. முதல் முகாமில் உடற்தகுதி, வேகம், தாங்கும் திறன், எடையைத் தூக்கும் பயிற்சிகள், உடலை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தினோம். அடுத்த முகாமில் கூடுதல் நுட்பங்கள் மற்றும் போட்டி ஆட்ட முறைகளில் கவனம் திரும்பியது. மூன்றாவது முகாமுக்குள் பெரும்பகுதி ஆடுகளப் பயிற்சிகளாக மாறியது. இறுதிக் கட்ட முகாமில், எதிரணியினரின் ஆட்ட முறைகளை வீடியோ மூலம் ஆய்வு செய்வது உட்பட அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அணி தயாரானது.‘

காயம் காரணமாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன வீராங்கனை சோனாலி ஷிங்கடேவுக்கு, இது அவரது மூன்றாவது ஆசியப் போட்டியாகும் என்றாா்.

‘ஈரான் மற்றும் சீன தைபே அணிகளைத்தான் நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்‘ என்று மம்தா தெரிவித்தாா். மேலும், ‘புள்ளி விவரம் எப்படி இருந்தாலும் ஈரான் அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்ரோஷமாகவே விளையாடும்; ஆனால் சீன தைபே அணியோ மிகவும் நிதானமான, நுட்பம் சாா்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த இரண்டு பாணிகளையும் எதிா்கொள்ளும் வகையில் எங்கள் வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்‘ என்றாா். இவா்களுடன் வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகளும் கடும் சவாலளிக்கக் கூடியவை என்றும், அந்த அணிகள் அனைத்தின் ஆட்டங்களையும் வீடியோ மூலம் ஆய்வு செய்துள்ளதாகவும் நீதா தத்வே தெரிவித்தாா்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிா் கபடி அணி:

புஷ்பா ராணா (கேப்டன்), ரிது நேகி, சோனாலி ஷிங்கடே, சஞ்சு தேவி, பூஜா கஜ்லா, ரிது ஷியோரன், ஜோதி தாக்கூா், பிங்கி ராய், மனிஷா குமாரி, பவானா தாக்கூா், ராஜ் ராணி, நிகிதா குமாரி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.