
ஸ்ரீ சரணி பந்துவீச்சில் சுருண்டது ஜப்பான்... 5 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய மகளிரணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிரணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதைப் பற்றி...

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய மகளிரணியினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிரணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயாவில், நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்ற இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் ஜப்பான் ஆகிய அணிகள் காலிறுதியின் 4-ஆவது போட்டியில் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஜப்பான் அணியில் அயகா கட்டோ 25 ரன்களும், ஹருணா இவாசாகி 10 ரன்களும் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் மை யனகிடா ரன் ஏதுமின்றி முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, எரிக்கா ஓடா 5 ரன்களிலும், அயுமி புஜிகாவா 4 ரன்களிலும், ஷிமகோ கட்டோ, விக்கெட் கீப்பர் ஹினாசே கோட்டோ தலா 3 ரன்களிலும், ரன்களிலும், அகாரி நிஷிமுரா 2 ரன்களிலும், அஹில்யா சந்தேல், எரிக்கா டோகுச்சி, நோனோஹா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
இந்திய அணி வீராங்கனை ஸ்ரீசரணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத ஜப்பான் அணி 19.5 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணித் தரப்பில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன்களுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்த ஸ்ரீசரணி 4 விக்கெட்டுகளும், ஷஃபாலி 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா, டாண்டி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் புகுந்த இந்திய அணியில், முதல் ஓவரில் அதிரடியாக விளையாடிய ஷாஃபாலி வர்மா 17 ரன்கள் விளாசினார். அடுத்த ஓவரின் 2-ஆவது பந்தில் கமலினி டக்-அவுட்டாக அடுத்து வந்த பாரதி ஃபுல்மாலியும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடக்க முதலே அதிரடி காட்டிய ஷஃபாலி 15 பந்துகளில் 6 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ரிச்சா கோஷ்12 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி வெறும் 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜப்பானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி, அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
Summary
India vs Japan, Asian Games Women’s Cricket quarterfinals: India women stormed into the semis where they will meet Bangladesh after beating Japan in the quarterfinal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






