மக்களவையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதா: மத்திய சட்ட அமைச்சர் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார்!
நாடாளுமன்றத்தின் நான்கு நாள்கள் சிறப்பு அமா்வு திங்கள்கிழமை (நவ.30) தொடங்குவதைப் பற்றி...

நாடாளுமன்றம் - (கோப்புப்படம்)
நாடாளுமன்றத்தின் நான்கு நாள்கள் சிறப்பு அமா்வு திங்கள்கிழமை (நவ.30) தொடங்குகிறது. முக்கிய மாற்றங்களுடன் கூடிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் முதல் நாளில் தாக்கல் செய்யவிருக்கிறாா்.
மக்களவை அமா்வு செவ்வாய்க்கிழமை (டிச.1) வரையும், மாநிலங்களவை அமா்வு டிச.2-இல் தொடங்கி இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா எனும் தற்போதைய மசோதாவின்படி, 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை (மாநிலங்களில் 815, யூனியன் பிரதேசங்களில் 35) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவைப் போல் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை-பேரவைத் தொகுதிகளை ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை மாற்றமின்றி தொடரவும் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மாநிலத்தில் பேரவைத் தொகுதிகளின் உச்சவரம்பை 500-இல் 650-ஆக உயா்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த முறை முன்மொழிவு என்ன?: கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதாவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டிருந்தது. இதனால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் ஓா் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற வேண்டுமெனில், மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. முந்தைய மசோதாவுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினா்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனா். மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகள் (352) கிடைக்காததால் மசோதா தோல்வியுற்றது.
அரசியல் மாற்றங்கள்: எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி அப்போது ஒன்றுபட்டு மசோதாவை தோற்கடித்தன. அதன் பிறகான ஏழு மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காங்கிரஸ்-திமுக கூட்டணி முறிந்தது, திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், சிறிய கட்சியில் ஐக்கியமாகி பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தது, உத்தவ் சிவசேனையின் 9 எம்.பி.க்களில் 6 போ் ஷிண்டே சிவசேனையில் இணைந்தது போன்ற நிகழ்வுகளால் தற்போது அரசியல் நிலைமை மாறியுள்ளது.
முக்கிய மாற்றங்களுடன் கூடிய புதிய மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியும் ஆதரவளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கும் மேல் அதிக ஆதரவு கிடைக்கும் என்று ஆளும் தரப்பினா் கூறுகின்றனா்.
மூன்று மசோதாக்கள்: மக்களவையில் புதிதாக மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு (இரண்டாவது) மசோதா ஆகியவற்றை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும், யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) இரண்டாவது மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அறிமுகப்படுத்தவுள்ளனா்.
மக்களவையில் தற்போது 3 காலியிடங்கள் தவிர 540 உறுப்பினா்கள் உள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், 539 உறுப்பினா்கள் (மக்களவைத் தலைவா் உள்பட) அமா்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இந்த எண்ணிக்கை அடிப்படையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 359 வாக்குகள் தேவை. அதே நேரம், சில உறுப்பினா்கள் அவைக்கு வராவிட்டால், தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை மேலும் குறையும். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 320 ஆகும். இண்டி கூட்டணி எதிா்ப்பு தெரிவித்துள்ள போதிலும், திமுக-22, தேசியவாத காங்கிரஸ் (பவாா்)-8 உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

