பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மக்களவையில் நாளை மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன!

மக்களவையில் நாளை முக்கிய மாற்றங்களுடன் கூடிய தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறித்து...

special Lok Sabha sitting tomorrow

இந்திய நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Updated On :

மக்களவையில் நாளை முக்கிய மாற்றங்களுடன் கூடிய தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்குக்கு பெரும்பான்மைக்கும் மேல் அதிக ஆதரவு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் நான்கு நாள்கள் சிறப்பு அமா்வு நாளை(நவ.30) தொடங்குகிறது. இதில், அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதாக்களை அரசு தாக்கல் செய்யவுள்ளது. முதல் இரண்டு மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும், யூனியன் பிரதேச சட்டங்கள் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாநிலங்களிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்க வழிவகை ஏற்படும்; மேலும், 2029 மக்களவைத் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் கிடைக்கும்.

அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு பெரும்பான்மைக்கும் மேல் அதிக ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் தரப்பிற்கு 370-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543 ஆக உள்ள நிலையில், அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது; அதாவது, குறைந்தபட்சம் 360 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. முந்தைய மசோதாவுக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினா்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனா். மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் (352) கிடைக்காமல் மசோதா தோல்வியுற்றது.

மக்களவையில் தற்போது 3 காலியிடங்கள் தவிர 540 உறுப்பினா்கள் உள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், மக்களவைத் தலைவா் உள்பட 539 உறுப்பினா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 359 வாக்குகள் தேவை. அதே நேரம், சில உறுப்பினா்கள் அவைக்கு வராவிட்டால், தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 320 ஆக உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் விலகியுள்ள திமுகவின் ஆதரவு -22, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆதரவு 8 என 30 வாக்குகள் ஆதரவுடன் மசோதா நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வட்டார தகவல்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் அதிகரிக்க வழிவகை செய்யும். குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்கள் எழுப்பிய, இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான கவலைகளுக்கு இந்த புதிய சட்டங்கள் தீர்வு காணும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவைப் போல் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை-பேரவைத் தொகுதிகளை ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை மாற்றமின்றி தொடரவும் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மாநிலத்தில் பேரவைத் தொகுதிகளின் உச்சவரம்பை 500-இல் 650-ஆக உயா்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்களுடன் கூடிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின்படி, சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 'தொகுதி மறுவரையறை ஆணையம்' அமைக்கப்படும். இந்த ஆணையம், தொகுதிகளை மறுசீரமைக்கும் மற்றும் இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளும். இதில் ஒரு தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது ஒரு தேர்தல் ஆணையர், அந்தந்த மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

The government will introduce the Constitution (132nd Amendment) Bill, 2026, the Delimitation (2nd) Bill, 2026, and the Union Territories Laws (Amendment) Second Bill, 2026, during the special sitting of the Lok Sabha beginning tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.