சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மகத்தான சாதனை.... 114 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது...

asian para games, PM Modi

ஆசிய விளையாட்டின் வளர்ச்சி, பிரதமர் மோடி - படங்கள்: ஸ்போர்ட்ஸ் இந்தியா, பிடிஐ

Updated On :

ஆசிய பாரா விளையாட்டில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றிக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கி நேற்றிரவுடன் முடிவடைந்தன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினார்கள்.

மொத்தமாக இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் பதக்கங்களை வென்று, 114 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் நிறைவு செய்தது.

முன்னதாக 2014 ஆசிய பாரா விளையாட்டில் 3 தங்கம் உள்பட 33 பதக்கங்களே வென்ற நிலையில், 2026ல் 30 தங்கம் உள்பட 114 பதக்கங்கள் வெல்லும் அளவுக்கு நமது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

ஆசிய விளையாட்டில் 84 பதக்கங்களே வென்ற நிலையில், ஆசிய பாரா விளையாட்டில் 114 பதக்கங்கள் வென்று இந்தியாவின் பாரா வீரர், வீராங்கனைகள் மகத்தான சாதனை படைத்துள்ளார்கள்.

இதுதான் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி இன்று (அக்.25) காலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆசிய பாரா விளையாட்டு 2026ல் நமது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மகத்தான சாதனையுடன் நிறைவு செய்துள்ளார்கள்.

114 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்கள். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சியும் மிகுந்த பெருமையும் அளித்துள்ளது.

தனித்துவமான விடாமுயற்சியுடன் விளையாடிய ஒவொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு தடகள வீரர், வீராங்கனைகளும் இந்த வரலாற்றுச் சாதனையில் பங்களித்துள்ளார்கள். தங்களது வெற்றியின் மூலமாக கணக்கில்லாத இந்தியர்களுக்கு அவர்கள் உத்வேகத்தை அளித்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

Summary

What an extraordinary achievement by our para-athletes PM Modi lauds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.