ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அழிவில்லாத புகழ்..! ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ரோம் ரசிகர்களின் அன்பைப் பெறக் காரணம் என்ன?

சாம்பியன்ஸ் லீக்கில் ரோம் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்ற ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் குறித்து...

A banner depicting Real Madrid's head coach Jose Mourinho is displayed by Roma fans during a Champions League opening phase soccer match between Roma and Real Madrid, in Rome, Wednesday, Oct.14, 2026. (AP Photo/Alessandra Tarantino)

ரோம் கால்பந்து ரசிகர்களின் அன்பு மழையில் ஜோஷ் மௌரிங்கோ - படம்: ஏபி

Updated On :

சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜோஸ் மௌரிங்கோ எதிரணியான ரோமா (ரோம்) அணியின் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றது கவனம் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்கத்தில் 3-1 என ரோமா 82ஆவது நிமிஷங்கள் வரை முன்னிலை வகித்தது. பின்னர், கடைசி 7 நிமிஷங்களில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பாக ரோமா கால்பந்து ரசிகர்கள் ஜோஸ் மௌரிங்கோவின் பதாகைகள் எடுத்து வந்து அன்பைப் பொழிந்தார்கள். முன்னதாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் என்பதால் அந்த ரசிகர்கள் இப்போதும் அன்புடன் இருக்கிறார்கள்.

ரோமா அணியின் பயிற்சியாளராக ஜோஷ் மௌரிங்கோ சேர்ந்த முதல் சீசனிலேயே (2022) ஐரோப்பாவின் கான்ஃபரன்ஸ் லீக்கை வென்றது. இதுதான் ரோமாவின் முக்கியமான ஐரோப்பிய கோப்பை என்பது கவனிக்கத்தக்கது.

பின்னர், 2023ல் ஐரோப்பிய சாம்பியன் இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். பின்னர் ஜன.2024ல் அணியில் இருந்து விலகினார்.

இந்தப் போட்டியில் ரோம் கால்பந்து ரசிகர்கள், ”ரோம் அணிக்கு புகழைச் சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும் ரோம் எப்போதும் கௌரவிக்கும். மக்கள் உங்களுக்கு எப்போதும் அழிவில்லாத புகழை அளிப்பார்கள்” எனப் புகழ்ந்தனர்.

ரோம் ரசிகர்கள் அன்பைப் பார்த்த மௌரிங்கோ, “இந்த அளவுக்கான அன்பை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை. ரோம் தொடக்கத்தில் எல்லாமே சிறப்பாக இருந்தது.

ஒரு கட்டத்தில் 3-1 என இருக்கும்போது போட்டி முடிந்துவிட்டதாக ரோம் அணியினர் நினைத்துவிட்டனர். ஆனால், உண்மையில் முடிந்தது ரோம் அணியினர்தான்” என்று பேசினார்.

Jose Mourinho bestowed with 'eternal glory' by Roma fans in winning return as Real Madrid coach

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.