ஜூட் பெல்லிங்கம், வினிசியஸ், கார்லோஸ் எஸ்பி அசத்தல்: ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!
லா லிகா கால்பந்துத் தொடரில் த்ரில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி குறித்து...

வினிசியஸ், கார்லோஸ் எஸ்பி, ஜூட் பெல்லிங்கம் - படங்கள்: எக்ஸ் / ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்துத் தொடரில் ரியல் மாட்ரிட் அணி 85ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் சான்டியாகோ பெர்னாபேயு கால்பந்துத் திடலில் மோதியது. இந்தப் போட்டியில் 6ஆவது நிமிஷத்தில் செல்டா விகோ அணியின் பாப்லோ டூரன் கோல் அடித்து அசத்தினார்.
அடுத்தாக, 16ஆவது நிமிஷத்தில் எம்பாபே தனக்குக் கிடைத்த பெனால்டியில் கோல் அடிக்காமல் தவறவிட்டார். முதல் பாதியில் 1-0 என செல்டா விகோ முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் ஜூட் பெல்லிங்கம் 66ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, 1-1 என சமன்படுத்தினார். இந்த கோல் அடிக்க வினிசியஸ் ஜூனியர் பெரிதும் உதவியிருப்பார்.
பின்னர், 85ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் அசத்தலான பாஸ் மூலமாக கார்லோஸ் எஸ்பி கோல் அடித்து 2-1 என வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டியில் ஜூட் பெல்லிங்கம் ஆட்ட நாயகன் விருது வென்றார். 64 சதவிகித நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் ரியல் மாட்ரிட் இருக்கிறது. பார்சிலோனாவும் சமமான புள்ளிகளில் இருக்கிறது.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 33 புள்ளிகள் (12 போட்டிகள்)
2. ரியல் மாட்ரிட் - 33 புள்ளிகள் (13 போட்டிகள்)
3. அத்லெடிகோ - 28 புள்ளிகள்
4. ரியல் பெட்டிஸ் - 27 புள்ளிகள்
5. ரியல் சோசியாடெட் - 22 புள்ளிகள்
6. செவில்லா - 19 புள்ளிகள்
𤠡@BellinghamJude, gol en su partido 1ï¸â£0ï¸â£0ï¸â£ de Liga con el Real Madrid! pic.twitter.com/lxlpzJwIg7
— Real Madrid C.F. (@realmadrid) November 21, 2026
Summary
Jude Bellingham, Vinicius Junior, Carlos Espi freak: Real Madrid win Thrill!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


