மான்செஸ்டர் சிட்டி போராட்டம் வீண்..! தடுப்பாட்டத்தில் பிஎஸ்ஜி மாஸ்டர்கிளாஸ்!
சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி - பிஎஸ்ஜி அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து...

மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி வீரர்கள். - படங்கள்: ஏபி, பிஎஸ்ஜி (எக்ஸ்)
சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி - பிஎஸ்ஜி அணிகளுக்கு இடையேயான போட்டி மிகுந்த சுவாரசியமாக நடைபெற்றது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி வென்றது.
இந்தப் போட்டியில், ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த பிஎஸ்ஜி அணியின் மிட்ஃபீல்டர் விடினாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி உடன் மோதியது. இந்தப் போட்டியில் 13, 15, 32ஆவது நிமிஷங்களில் முறையே பிஎஸ்ஜி வீரர்கள் டோவோ, டெம்பெலே, விடினா கோல் அடித்து அசத்தினார்கள்.
முதல் பாதியில் 3-0 என பிஎஸ்ஜி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த மான்செஸ்டர் சிட்டி அணியின் எர்லிங் ஹாலண்ட் 53ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, 63ஆவது நிமிஷத்தில் மாக்னஸ் அக்லியூஷ் கோல் அடித்து 4-1 என பிஎஸ்ஜியை முன்னிலைப் பெற செய்தார்.
மீண்டும் ஹாலண்ட் 75ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-4 என அணியை முன்னிருத்தினார். பின்னர், பல முறை சிட்டி அணி கோல் அடிக்க முயன்றனர். 22 ஷாட்டுகள் அடித்தார்கள். ஆனால், அதில் 8 மட்டுமே இலக்கை நோக்கி அடித்தார்கள்.
பிஎஸ்ஜி அணியினரின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிட்டி அணியினர் கோல் அடிக்கும் நோக்கத்திலேயே இருந்தார்கள். பந்தையும் அதிக நேரம் (53 சதவிகிதம்) சிட்டி அணியினரே தக்க வைத்திருந்தனர்.
டோனரும்மா ஃபெர்ரன் டோரஸ் அடித்த பெனால்டி கோலை தடுத்து நிறுத்தினார். அதே சமயம் நான்காவது கோலை அவரை தடுத்தும் எதிர்பாரா விதமாக வலைக்குள் விட்டதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இறுதியில் 2-4 என மான்செஸ்டர் சிட்டி தோல்வியுற்றது. நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜிக்கு இது இரண்டாவது வெற்றி. இத்துடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. பார்சிலோனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
Summary
Manchester City were brought down to earth by a masterclass from Champions League holders Paris St-German at Etihad Stadium.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


