வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

வெற்றியில் இன்டர் மிலன், அத்லெடிகோ..! சமனில் முடித்த பிஎஸ்ஜி, மான்செஸ்டர் யுனைடெட்!

சாம்பியன்ஸ் லீக்கில் இன்றைய நாளில் நடந்த போட்டிகள் குறித்து...

Scorecard for Inter Milan, PSG, and Atlético Madrid

இன்டர் மிலன், பிஎஸ்ஜி, அத்லெடிகோ மாட்ரிட் அணிகளின் ஸ்கோர் கார்டு - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்

Updated On :

சாம்பியன்ஸ் லீக்கில் இன்றைய நாளில் நடந்த ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகள் சமனிலும் (4 அணிகளுக்கு), ஐந்து போட்டிகள் வெற்றி, தோல்வியிலும் (10 அணிகள்) முடிந்துள்ளன.

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப் புகழப்படும் பலம்வாய்ந்த அணியான பயர்ன் மியூனிக்கை லில் எல்ஒஎஸ்சி அணி 2-1 என வென்று பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இதேபோல் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி - ரோம் அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது. பிஎஸ்ஜியில் நட்சத்திர வீரர்கள் பலர் காயத்தினால் விளையாடாமல் இருக்கிறார்கள்.

மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஸ்போர்டிங் சிபி அணியும் மோதிய ஆட்டம் 2-2 என சமனில் முடிவடைந்தது. யுனைடெட் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

இண்டர் மிலன் அணி 2-0 என விஎஃப்பி ஸ்டட்கார்ட் அணியை வீழ்த்தியது. கேப்டன் லொடாரோ மார்டினேஸ் அசத்தல் கோல் அடித்தார்.

அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என வைக்கிங் அணியை வீழ்த்தியது. இதில் சார்லோத், ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார்கள்.

ஃபெனெர்பாஹ்சே எஸ்கே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க்வை வீழ்த்தியது. பார்சிலோனா அணி 4-1 என சாபா அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியல்

1. ரியல் மாட்ரிட் - 15 புள்ளிகள்

2. பிஎஸ்ஜி - 13 புள்ளிகள்

3. கோமோ - 12 புள்ளிகள்

4. பார்சிலோனா - 12 புள்ளிகள்

5. லிவர்பூல் - 12 புள்ளிகள்

6. ரியல் பெட்டிஸ் - 12 புள்ளிகள்

7. ஆர்செனல் - 11 புள்ளிகள்

8. மான்செஸ்டர் சிட்டி - 10 புள்ளிகள்

Summary

Inter Milan and Atlético secure wins..! PSG and Manchester United finish in a draw!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.