கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!

ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.

Updated On :

ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரின் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர்கள் ஒதுக்கீடு செய்ததில் சுமார் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளராகச் செயல்பட்டு வந்த கவி பிரசாத் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, கவி பிரசாத்தின் செல்போன் உரையாடல்களில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், விசாரணைக்காக கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வியாழக்கிழமை (நவ. 26) காலை கைது செய்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கைது சம்பவம் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) police have arrested an assistant to the brother of former minister K.N. Nehru in connection with allegations of irregularities in a Rs 1,000 crore tender.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.