பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாலியல் வன்கொடுமை புகார்: மாலத்தீவு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கைது!

மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டது தொடர்பாக..

Former Maldives foreign minister Abdulla Shahid

மாலத்தீவு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் - X

Updated On :

இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

18 வயதுக்குள்பட்ட இளம்பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின்பேரில், 64 வயதான அப்துல்லா ஷாஹித் திங்கள்கிழமை இரவு 9.59 மணிக்கு நீதிமன்றப் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்டதாக மாலத்தீவு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அப்துல்லா ஷாஹித் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவலில் எடுக்கப்பட்டதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கைது நடவடிக்கை முன்னதாக அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில்,

ஷாஹித் தனக்கு எதிராகக் கூறப்படும் அவதூறான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அரசியல் ரீதியாகப் பார்க்கப்படும் கதைகள் முற்றிலும் ஆதாரமற்ற பொய்களாகும். ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மக்களை அவர்க் கேட்டுக்கொண்டார்.

ஹுல்ஹுமாலேயில் உள்ள ரெயின்போ ஓஷன் ஃப்ரண்ட் என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஷாஹித் கைது செய்யப்பட்டதாகவும், முதலில் ஹுல்ஹுமாலே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் தூனிதூவில் உள்ள போலீஸ் காவல் மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னணி மற்றும் அரசியல் வாழ்க்கை

2028 தேர்தலுக்கான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்கு ஷாஹித் பிரசாரம் செய்து வரும் வேளையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் தனது விருப்பத்தை அவர் அறிவித்திருந்ததாகவும், தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தீவுகளுக்குப் பயணம் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலத்தீவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஷாஹித், இரண்டு முறை வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2007 முதல் 2008 வரை அப்போதைய அதிபர் மௌமூன் அப்துல் கயூமின் கீழும், 2018 முதல் 2023 வரை முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் கீழும் பணியாற்றியுள்ளார்.

2009 முதல் 2014 வரை மாலத்தீவு நாடாளுமன்ற தலைவராக பணியாற்றினார். மேலும், 2021 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76-வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷாஹித் 2013-ல் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். பிப்ரவரி 2024-ல் அக்கட்சியின் தலைவரானார்.

2028 தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைமுறையில் பங்கேற்பதற்காக, அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

1984-ல் தனது பொதுச் சேவைப் பயணத்தை மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் பல்வேறு தூதரக மற்றும் அரசியல் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.