வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது பற்றி...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

ஆனால், கார்த்திகை தீப நாளான நவம்பர் 24 அன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேவுள்ள தீபத் தூணில் கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றியது.

உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், வழக்கமான இடத்தில் தீபமேற்றியது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வருத்தம் தெரிவித்து, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, மதுரை ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய், கோவில் செயல் அலுவலா் செல்வி ஜி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவமதிப்பு மனுக்களை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆஜராகி இன்று காலை கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து வழக்குகளை நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.

Summary

Thiruparankundram cases to be heard tomorrow! Supreme Court announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.