தங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நிலைப்பாட்டில் விசிகவுக்கு உடன்பாடில்லை: திருமாவளவன்

உச்சநீதிமன்ற நிலைப்பாட்டில் விசிகவுக்கு துளியும் உடன்பாடு இல்லை என திருமாவளவன் கூறியிருப்பது தொடர்பாக...

VCK does not agree with the Supreme Court's stance on the Thiruparankundram 'deepam'

விசிக தலைவர் தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Updated On :

திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபமேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நிலைப்பாட்டில் விசிகவுக்கு துளியும் உடன்பாடு இல்லை என அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'(சிஐஎஸ்எஃப்) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.

நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.

எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.

வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

VCK does not agree with the Supreme Court's stance on the Thiruparankundram 'deepam' (lamp) issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.