கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்

அரசியலமைப்பு நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

M.K. Stalin

மு.க. ஸ்டாலின் - யூடியூப்

Updated On :

மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திமுகவின் போராட்டம் தொடரும் என்று அரசியலமைப்பு நாளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் நவ. 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை நினைவுகூர்ந்து தலைவர்கள் பலரும் பதிவிட்டு வரும் நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான், பல நூற்றாண்டுகளாகச் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த இந்தியாவில், சமத்துவத்தை உறுதி செய்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

காலந்தோறும் மாறிவரும் சமூகத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரிணமிக்கும் உயிரோட்டமுள்ள ஆவணமாகவே நமது அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார்.

குடியரசாக நமது பயணத்தில், 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிட அரசியலமைப்புச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது ஆகிறது. இந்த நோக்கத்துடன்தான் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிட மாடல் அரசு அமைத்தது.

தற்போதைய ஆட்சியாளர்கள் அக்குழுவைக் கலைத்திருந்தாலும், மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் தொடரும்!

இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

MK Stalin x post on constitution day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.