காவிரி விவகாரம்! விவசாயிகளின் கண்ணீரைவிட ஈகோ பெரிதல்ல: தவெக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியது குறித்து...

மு.க. ஸ்டாலின். - கோப்புப் படம்
கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரதமரை சந்திக்கலாம் என தவெக அரசை மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, குறுவை போச்சு; சம்பாவும் கருகுது. நீரின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு, மௌனமாக உள்ள முதல்வரின் பதில் என்ன?
காவிரியில் 11 டிஎம்சி தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி. நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு. இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்.
காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள். தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களின் ஈகோ (Ego) பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு பொறுப்புக்கூறல் இல்லாமல் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
M.K. Stalin urges convening an all-party meeting on the Cauvery issue
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

