உங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருக்கிறதா? இனி கொண்டாட்டம்தான் போங்க!நிரம்பி வழியும் சபரிமலை முன்பதிவு! வருவதோ பாதி பக்தர்கள்! சிக்கலில் கோயில் நிர்வாகம்!திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

உங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருக்கிறதா? இனி கொண்டாட்டம்தான் போங்க!

உங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருந்தால், பல்வேறு வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது பற்றி...

பிஎஃப் கணக்கு

பிஎஃப் கணக்கு

Updated On :

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விதிகளில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது

தற்போதைய நிலவரப்படி, பிஎஃப் கணக்கு இருக்கும் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள சேமிப்புத் தொகையில் 90 சதவீதம் வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். முன்பு இது 75 சதவீதமாக இருந்தது.

மேலும், பணியிலிருந்து விலகிய பிறகு, வருங்கால வைப்பு நிதியை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களிலிருந்து வெறும் இரண்டு மாதங்களாக வாரியம் குறைத்துள்ளது.

முக்கிய மாற்றமாக, ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புத் தொகையை ஒரே நேரத்தில் முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, 'முறையான திரும்பப் பெறும் திட்டம்' மூலம் மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவணையாக எடுக்கும்போது, வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை வட்டியை ஈட்டும் என்பதால் அதுவும் பயனாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதும், ஓய்வுபெறுபவர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிச் சேமிப்பிலிருந்து தொடர்ச்சியாக மாத வருவாய் ஈட்ட இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி (EPF) சேமிப்புக் கணக்கு இருக்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இந்த மாற்றங்கள், மிகுந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Do you have a PF account in your name? Get ready to celebrate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.