பிஎஃப் பணத்தை மாதந்தோறும் பெறலாம்... ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்புகள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

வருங்கால வைப்பு நிதி அமைப்பு

Updated On :

ஓய்வூதியதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தலைநகர் புதுதில்லியில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பி.எஃப் சந்தாதாரர்களின் நலன், நிதித் தீர்வுகள் தொடர்பான பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், குறிப்பிடத்தக்க ஒன்றாக வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் உள்ள தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, தவணை முறையில் மாதந்தோறும் பணம் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புதிய வசதியின் கீழ், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலிருந்து ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் அவரவர் விருப்பத்தின் பேரிலேயே செயல்படுத்தப்படும். அதேநேரத்தில் இதனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அதே நேரத்தில் ஓய்வூதியதாரர் எடுத்த தொகை போக வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மீதமிருக்கும் பணத்திற்கு உள்ள தொடர்ந்து வட்டி கிடைக்கும்.

இந்த புதிய நடைமுறையில், முதற்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிஎஃப் கணக்குகளில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தங்களது பி.எஃப் சேமிப்பிலிருந்து அதிகபட்சமாக 90 சதவீதம் பணத்தை முன்பணமாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் பயனாளிகள் தங்களுடைய மொத்தத் தொகையையும் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தையும் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Summary

The Employees’ Provident Fund Organisation (EPFO) has approved a Systematic Withdrawal Plan (SWP), allowing retirees to withdraw money from their provident fund (PF) accounts in instalments instead of taking out the entire corpus at once.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.