இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
நம்பிக்கை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது குறித்து...

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா - டிஎன்எஸ்
புதுதில்லி: நம்பிக்கை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது 74-வது நிறுவன நாள் (நவ.1) புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாடியது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விழாவிற்குத் தலைமை வகித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: தனது 74 ஆண்டுகாலப் பயணத்தில், இபிஎஃப்ஓ நாட்டின் தொழிலாளர்களுக்கான ஒரு நம்பிக்கைக்குரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் பங்களிப்புகள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 32 லட்சம் கோடியில், இந்த அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை பிரதிபலிக்கிறது.
சமூகப் பாதுகாப்பு என்பது மனிதநேய உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மாண்டவியா, ஒவ்வொரு தொழிலாளியையும் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாகக் கருதி, அவர்களுக்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளித்து, அவர்களின் ஒவ்வொரு கவலையையும் குறையையும் கருணையுடனும் பரிவுடனும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு அதிகாரியும் கடைநிலைத் தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு, மீள்திறனை வளர்த்து, செயல்முறைகளை மேம்படுத்தி, தொழிலாளர் நலன் சார்ந்த புதுமை முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வாட்ஸ்ஆப் மூலம் பிஎஃப் வழங்கும் திட்டம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொடா்பான சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதன் மூலம் தங்கள் பிஎஃப் பிடித்தம் தொடா்பாக விவரங்கள், பிஎஃப் இருப்புத் தொகை, கடைசி 5 பரிவா்த்தனைகள், பாஸ்புக் தகவல் உள்ளிட்டவற்றை பயனாளா்கள் வாட்ஸ்ஆஃப் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் ஊக்குவிப்புத் திட்டமான பிரதமரின் விகாஸ் பாரத் ரோஜ்கா் யோஜனா குறித்த தகவல்களையும் இதில் பெற முடியும். இந்த புதிய சேவை மூலம் பயனாளா்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு செல்வதைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 73-ஆவது நிறுவன நாளையொட்டி இந்த புதிய வாட்ஸ்ஆப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இத்துடன் செயலற்ற நிலையில் உள்ள பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை சம்பந்தப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்குக்கு தானாகவே திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் அமைச்சா் மாண்டவியா தொடங்கி வைத்தாா். இதற்கு ஆதாா் மூலம் சம்பந்தபட்ட பயனாளா் தனது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். ரூ.1,000-க்கு குறைவாக இருந்தால் அவா் விண்ணப்பிக்காமல் தானாகவே வங்கிக் கணக்குக்கு சென்றுவிடும்.
EPFO's 74-Year Journey Built on Trust, Service and Commitment to Workers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


