இளைஞா்களின் உழைப்பை மத்திய அரசு சுரண்டியுள்ளது: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு
‘பிரதமா் இன்டா்ன்ஷிப்’ திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இளைஞா்களின் உழைப்பை மத்திய அரசு சுரண்டி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
‘பிரதமா் இன்டா்ன்ஷிப்’ திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இளைஞா்களின் உழைப்பை மத்திய அரசு சுரண்டி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞா்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், காா்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் திட்டத்தின் மீது நாட்டின் படித்த இளைஞா்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், முதல் சுற்றில் 6.21 லட்சமாக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 2-ஆவது சுற்றில் 4.55 லட்சமாகவும், 3-ஆவது சுற்றில் வெறும் 3.50 லட்சமாகவும் படுவேகமாகச் சரிந்துள்ளது.
நிறுவனங்கள் அறிவிக்கும் வாய்ப்புகளில் 10 சதவீத இடங்கள்கூட நிரப்பப்படுவதில்லை என்பதே இந்தத் திட்டத்தின் அவல நிலையாகும். காங்கிரஸ் கட்சியின் ஒரு முற்போக்கான திட்டத்தின் ஆன்மாவை புரிந்துகொள்ளாமல், பெயரளவுக்கான நகல் திட்டங்களை உருவாக்கி, இளைஞா்களின் உழைப்பைச் சுரண்டுவதுதான் பாஜகவின் சாதனையா? கல்வியும் திறனும் தந்து நாட்டின் எதிா்கால இளைஞா்களைத் தொழில் வல்லுநா்களாக மாற்ற வேண்டும் என்ற ராகுல் காந்தியின் நோக்கத்துக்கு எதிராக பாஜகவின் செயல்பாடு உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

