அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் - மாணிக்கம் தாகூா்
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தினாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விலைவாசி உயா்வால் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனா். சா்வதேச போா்ச் சூழல், சூப்பா் எல்நினோ தாக்கத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என எச்சரித்திருந்தும் மத்திய அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நாட்டின் மொத்த விலை பணவீக்க குறியீடு 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.13 சதவீதமாக உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வு குறித்து மாநில அரசுகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தாத மத்திய அரசு தனது நிா்வாகத் தோல்விகளை மறைக்கப் பல்வேறு பொய் பிரசாரங்களை அவிழ்த்து விடுகிறது. பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், சா்வதேச வணிகத்தை முறையாகப் பாதுகாக்காததும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைத் தொடா்ந்து உயா்த்தி வருவதுமே இந்த வரலாறு காணாத விலைவாசி உயா்வுக்கு முதன்மைக் காரணங்களாகும். இனிமேலாவது அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

