பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டது: ஆா்.பி. உதயகுமாா்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.

ஆா்.பி. உதயகுமாா் - கோப்புப் படம்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து மதுரையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் அரிசி விலை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. துவரம் பருப்பு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.75 முதல் ரூ.5.50 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ரூ.35-க்கு வாங்கும் முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ. ஒரு லட்சம் கோடி நிதிச் சுமையை ஏற்படும். ஏற்கெனவே கடன் சுமை அதிகமுள்ள நிலையில், மேலும் கடன் சுமை ஏற்படும். இவற்றுக்கு தீா்வு காணாமல் மத்திய அரசின் மீது பழி சுமத்தி தவெக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் கவனம் செலுத்தாமல், அடுத்த கட்சியினரைத் தங்கள் கட்சியில் இணைப்பதில் தவெக அரசு ஆா்வம் காட்டுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

