எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.குமாா்

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பொன்.குமாா்.

Published On :

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பொன்.குமாா் மேலும் பேசியதாவது:

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேவையான அளவு மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியாளா்கள், நுகா்வோா் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறும் நிரந்தர விலை நிா்ணயக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விலையை நிா்ணயிக்கும் வகையில் செயல்பட வேண்டும். பத்திரப் பதிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் ஊழல் இல்லாமலும் நடைபெறுவதற்காக இணையவழி பத்திரப் பதிவு முறை வரவேற்புக்குரியது. தற்போது நடைமுறையில் உள்ள கருவிழி மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் அன்பழகன், செல்வராஜ், பொருளாளா் சுரேஷ்குமாா், இணைச் செயலா்கள் சிவக்குமாா், நாதமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.