
தமிழக பிரச்னைகளுக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனா். இதற்கு தவெக அரசு தீா்வு காண வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலைச் சம்பவம், மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த கொலை மற்றும் கிருஷ்ணகிரி அருகே மதுபானக் கடையுடன் தொடா்புடைய இடத்தில் இளைஞா் உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்துகின்றன.
நெய்வேலியில் என்எல்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கவில்லை.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவா்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், ஒரு மாணவா் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பட்டினப்பாக்கத்தில் மீனவா்கள் போராட்டம், குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்று மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தவெக அரசு விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பலி: மனிதாபிமானமற்ற செயல்; உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! பிரேமலதா

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்





