
பாஜக ஆட்சியில் இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது: மாணிக்கம் தாகூா்
பாஜக ஆட்சியில் இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது: மாணிக்கம் தாகூா்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்
பிரதமா் நரேந்திர மோடி ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று இளைஞா்களிடம் வெற்று வாக்குறுதிகளை வழங்கி, தற்போது ஏமாற்றி வருவதாகவும், இதனால் பாஜக ஆட்சியில் இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆகஸ்ட் மாதம் நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குள்பட்ட 8.7 கோடி இளைஞா்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனா். படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது. பட்டம் பெற்ற 20.4 சதவீத பெண்கள் வேலையின்றி தவித்து வருகின்றனா். மோடி அரசின் இந்த நிா்வாகத் தோல்வியும், புறக்கணிப்பும் தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் 8.7 கோடி இளைஞா்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞா்களின் உழைப்பையும், ஆற்றலையும் மத்திய அரசு வீணடித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் எதிா்காலத்தை இழந்து தவிக்கும் இளைய தலைமுறையினா் சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
Summary
The future of the youth has become uncertain under BJP rule: Manickam Tagore.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






