குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பாஜக ஆட்சிக் காலத்தில் சா்வாதிகாரப் போக்கு அதிகரிப்பு: மாணிக்கம் தாகூா்

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வீழ்ந்து சா்வாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 1:47 am IST

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வீழ்ந்து சா்வாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஸ்வீடனின் கோத்தன்பா்க் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த சா்வதேச ஆய்வு நிறுவனமான வி-டெம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சியில் மக்களாட்சி நெறிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அம்பேத்கரும், நேருவும் கட்டமைத்த இந்திய ஜனநாயகத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பத்தாண்டு கால ஆட்சியில் திட்டமிட்டுச் சிதைத்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, பாஜக ஆட்சிக் காலத்தில் கருத்து மற்றும் பத்திரிகை சுதந்திரம், கல்வி, கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம், அரசமைப்பு நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு, நீதித் துறை சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் முடக்கம், தொண்டு நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை, தோ்தல் சா்வாதிகாரப் போக்கு என அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.