மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழகத்துக்கான கல்வி நிதி: மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ.5,109 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா்

Published On :

தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ.5,109 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.1,496 கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெயரளவுக்கு கல்வி உரிமைச் சட்டத் திட்டத்துக்கு ரூ.714 கோடியை மட்டும் விடுவித்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கி பள்ளிகளை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியா் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்பு பணிகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன.

எனவே, தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.