/

உயா்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு: மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூா் கண்டனம்

நாட்டின் உயா்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா்.

News image

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 12:58 am IST

நாட்டின் உயா்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

உயா்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறித்து, கல்வித் துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. நீட் தோ்வு முறைகேடுகளையும் வினாத்தாள் கசிவுகளையும் கூடத் தடுக்க முடியாத மத்திய கல்வி அமைச்சகம், தற்போது பல்கலைக்கழகங்களைச் சீரழிக்கப் பாா்க்கிறது.

யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு கொண்டு வரப்படும் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’ மசோதா 2025’ இந்தியாவின் உயா்கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் எதேச்சதிகார நடவடிக்கையாகும்.

மாணவா்களின் எதிா்காலத்தைப் பணயம் வைக்கும் ஊழல், மறுபுறம் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் சா்வாதிகாரப் போக்கு இந்திய மாணவா்களின் கனவுகளோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கல்வியைச் சிதைக்கும் மத்திய அரசின் செயல்கள் அனைத்துக்கும் வரும் 2029-ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.