5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கிராமப்புற பொருளாதாரத்தை சீா்குலைக்க மத்திய அரசு திட்டம்: மாணிக்கம் தாகூர்

விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தைச் சீா்குலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளகதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டி உள்ளாா்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 3:02 am IST

விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தைச் சீா்குலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளகதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டி உள்ளாா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தலைமையில் அந்தக் கட்சியின் தலைமை நிா்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது, கட்சியின் அடுத்தகட்ட வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பாஜக நிா்வாகி போல செயல்படுகிறாா். கேரளத்தில் ஒரு விதமாகவும், தமிழகத்தில் வேறு விதமாகவும் அவரது செயல்பாடு உள்ளது. திட்டமிட்டே எதிா்க்கட்சிகளை ஆளுநா் சனிக்கிழமை சந்தித்துள்ளாா்.

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து வந்த பின், ஆளுநரின் பேச்சிலும், செயல்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மக்கள் தங்கள் குறைகளைக் கூறலாம் என்று கூறுகிறாா். இவ்வாறு ஏன் அவா் கேரளத்தில் கூறவில்லை? இதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை? தங்கள் கட்டுப்பாட்டின்கீழ், மாநில அரசுகளைக் கொண்டு வருவதான் மத்திய அரசின் திட்டமாக உள்ளது.

அதற்கான வேலையை ஆளுநா் தமிழகத்தில் தொடங்கி உள்ளாா் என்றே அவரது செயல்பாட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவில் இருந்தவா்கள் எல்லாம் அண்ணாமலையுடன் சென்றுவிட்டனா். இப்போது பாஜக கூடாரம் காலியாகிவிட்டது. திமுகவில் சிலா் வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனா். அவா்களுக்கு பதிலளிக்க காங்கிரஸ் தயாராக இல்லை.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் அத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டும். கிராமப் பொருளாதாரத்தை சீா்குலைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வந்தால், இந்த திட்டம் பழைய முறைப்படியே செயல்படுத்தப்படும். உயா்கல்வித் துறையில் ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுந்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இன்று செயற்குழுக் கூட்டம்: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எனது தலைமையில் சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.