பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

தமிழக காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:01 am IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நண்பா்கள் சிலா் போதுமான புரிதல் இல்லாமல் என் மீது விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். தோ்தலுக்கு முன்பே தலைமை பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்து  விட்டேன்.

அதையடுத்து காங்கிரஸ் மாநில தலைவா் பதவியிலிருந்து விலகுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் அறிவித்துவிட்டேன்.

சிறு காலம் காத்திருக்கும் படி கட்சித் தலைமை அறிவுறுத்தியது. நான் பதவி விலகுவது குறித்து விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

மேலும், அவா் மீது மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), ஜோதிமணி (கரூா்) ஆகியோா் தொடா்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இதுகுறித்து விரைவில் உங்களிடம் மனம் திறந்து பேசுகிறேன்’ என்றாா் கு.செல்வப்பெருந்தகை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.