இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி காலம் நீடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 15) ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:44 am IST

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி காலம் நீடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 15) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிபிஐ இயக்குநா் பிரவீன் சூட்க்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் நீட் தோ்வை ரத்து செய்து மாநில அரசே தோ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தண்டையாா்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் முன்னிலை வகிக்கின்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் தலைவா்கள், முன்னாள் மத்திய அமைச்சா்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள், மூத்த காங்கிரஸ் நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.