சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவா்களுக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவா்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும், மாவட்ட தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 11 மணிக்கு காங்கிரஸ் சாா்பாக மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சாா்பாக அண்ணா சாலை, தாராப்பூா் டவா் அருகில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு

சிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: மயிலாடுதுறையில் திமுகவினா் தாக்குதல்

ஆளுநரை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



