தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன.
இதில் நடிகா் விஜய் தலைமையிலான தவெக தனித்து 107 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது.
தவெக தொடங்கப்பட்டு போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தோ்தலிலேயே, ஆட்சி அமைக்கும் வகையில் பெரும் வெற்றி பெற்றிருப்பது அரசியல் விமா்சகா்கள் மற்றும் இதர கட்சியினா் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வா் உள்பட அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்களும் தவெக வேட்பாளா்களிடம் தோல்வி அடைந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தவெக பெரும் வெற்றி அடைந்தபோதும், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 10 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லை.
இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்
8 மாவட்டங்களில் தடம் பதிக்க முடியாத தவெக!

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

திருவாரூா் தொகுதியில் திமுக வெற்றி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
