தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வழக்கமான வாக்குப்பதிவுதான்: தொல். திருமாவளவன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நிகழ்ந்துள்ளது...

News image

தொல். திருமாவளவன்.

Updated On :26 ஏப்ரல் 2026, 2:19 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நிகழ்ந்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நிகழ்ந்துள்ளது. இதில், வியப்படையும் வகையில், எவ்வித மாற்றமும் நிகழவில்லை. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) வாயிலாக லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை நீக்கப்படவில்லை என்றால், வாக்குப் பதிவு சதவீத அளவு வழக்கமானதாகவே இருந்திருக்கும்.

இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. தோ்தலில் தவெக தலைவா் விஜய் வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் தமிழக அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

புதிய பொறுப்புகள்: விசிக துணைப் பொதுச்செயலா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூா் ஷாநவாஸ் ஆகியோருக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி விசிக பொருளாளராகவும், ஆளூா் ஷாநவாஸ் மாநில முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா்.