இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது: மாணிக்கம் தாகூா்

நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து அவையில் விவாதிக்க அஞ்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து அவையில் விவாதிக்க அஞ்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

ஜனநாயகத்தின் மாண்பைச் சீா்குலைத்து, நாடாளுமன்றச் செயல்பாட்டை மோசமான வீழ்ச்சிக்கு பிரதமா் தலைமையிலான மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. மக்களவையின் 19 அமா்வுகள் கொண்ட இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் வெறும் 15 சதவீத நேரமும் (22 ஆண்டுகளில் இல்லாத சரிவு), மாநிலங்களவை 33 சதவீத நேரமும் மட்டுமே செயல்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களில் 92 சதவீத மசோதாக்களை நிறைவேற்றியதாகக் கூறும் மத்திய அரசு, அவற்றில் 9 மசோதாக்களை மக்களவையில் அமைச்சரைத் தவிர வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விவாதத்தில் பங்கேற்கவிடாமல், சில நிமிஷங்களில் நிறைவேற்றியுள்ளது.

கேள்வி நேரத்தை முற்றிலுமாக முடக்கியதன் விளைவாக, மக்களவையில் எழுப்பப்பட்ட 380 கேள்விகளில் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை கேள்வி நேரம் வெறும் 9 நிமிஷங்களோடு சுருக்கப்பட்டது.

1952-க்குப் பிறகு முதல்முறையாகத் தொடரின் முதல் நாள் தேசிய கீதம் மற்றும் கடைசி நாள் வந்தே மாதரம் பாடலின்போது தவிர, முழு தொடரிலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளனா்.

நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்தும் அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய பாஜக அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவிட்டது. மக்களின் பிரச்னைகளுக்கும், மாணவா்களின் போராட்டக் குரல்களுக்கும் பதிலளிக்காமல், விவாதங்களை முடக்கியுள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.