மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இதுவரை 152 தோ்வுத் தாள் கசிவு: ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

இதுவரை 152 தோ்வுத் தாள் கசிந்திருப்பதாக ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டியிருப்பது பற்றி...

News image

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 12:46 am IST

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் மத்திய அரசு சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளில் 152 முறை ‘தோ்வுத் தாள் கசிவு’ அரங்கேறியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சாா்பில் நடத்தப்பட்ட தோ்வுகளில் 152 தோ்வுத்தாள் கசிவுகள் நிகழ்ந்துள்ளன. இதில், அதிா்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், தில்லி  உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தோ்வுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தோ்வுத்தாள் கசிவுகள் என்பது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதில் கூறவேண்டும்.

காங். மாமன்ற உறுப்பினா் இடைநீக்கத்துக்கு கண்டனம்: மாணிக்கம் தாகூா் வெளியிட்ட மற்றொரு பதிவு: கோவை மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 4 மாமன்ற உறுப்பினா்கள் மீது திமுக மாமன்ற உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனா். இதையடுத்து, காயத்ரியை 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து கோவை மேயா்  ரங்கநாயகி அறிவித்துள்ளாா்.  இந்த ஜனநாயக விரோதச் செயல்;  கடும் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.

Summary

152 exam papers leaked so far: P. Manickam Tagore alleges.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.