FOLLOW US

ON GOOGLE DISCOVER

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!

தில்லி போராட்டக் களத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் மீது மை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து...

News image

அபிஜித் திப்கே மீது மை வீசித் தாக்குதல் - PTI video

Updated On :18 ஜூலை 2026, 1:58 pm IST

தில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே மீது மை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி அபிஜித் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், 21 நாள்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவரை தில்லி காவல்துறையினர் இன்று காலை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வாங்சுக்கின் தொடர்ச்சியாக, அபிஜித் திப்கே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி, ஜூலை 20 ஆம் தேதியில் தங்கள் கட்சியின் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார். ஆனால், இந்த போராட்டத்திற்கு இன்னும் அனுமதி வாங்கவில்லை என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று போராட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மீது மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த பெண் ஒருவர் அபிஜித் மீது மை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A woman throws ink at CJP founder Abhijeet Dipke at Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.