மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி அபிஜித் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்த நிலையில், போராட்டத்தின் தொடர்ச்சியாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அபிஜித் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆதரவாளர்களிடையே அவர் பேசியதாவது, இன்று முதல் எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன்.
போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்க வேண்டாம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) பெரிய தவறு செய்துள்ளனர். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளர வேண்டும். அனைவரும் ஜந்தர் மந்தருக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திட்டமிட்டபடி, ஜூலை 20 ஆம் தேதியில் எங்கள் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார்.

அபிஜித் திப்கே - PTI
முன்னதாக, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், 21 நாள்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவரை இன்று காலையில் தில்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், அபிஜித்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
Summary
CJP Founder Abhijeet Dipke sits on indefinite hunger strike now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் நோக்கி பேரணி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடா் போராட்டம்: வாங்சுக் 8-ஆவது நாளாக உண்ணாவிரதம்!

கரப்பான்பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே இந்தியா வருகை! | CJP

இந்தியா வந்தார் அபிஜித் திப்கே! தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


