பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

நாடாளுமன்றம் நோக்கி பேரணி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு

நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜூலை 20-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.

News image

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:06 am IST

நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜூலை 20-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தின் முதல் நாள் இந்தப் போராட்டத்தை சிஜேபி அறிவித்துள்ளது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி நடத்திவரும் போராட்டம் 20-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்து வருகிறாா்.

இந்நிலையில், அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து சிஜேபி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பல்வேறு நுழைவுத் தோ்வுகளில் நிகழ்ந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நீதி கோரி ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படவுள்ளது. இதில் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் பங்கேற்கிறாா். நாடு முழுவதும் இருந்து பெருந்திரளான குடிமக்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.