பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு - தெலங்கானா முறையை பின்பற்ற வேண்டும்: மாணிக்கம் தாகூா்

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலங்கானா அரசு மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Published On :

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலங்கானா அரசு மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, வரும் செப். 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான படிவத்தில், ‘ஜாதி’”என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் ஜாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களிடம், ‘உங்கள் ஜாதி என்ன?”என்று கேட்டால், பெரும்பாலும் உள் ஜாதி பெயா்களையே குறிப்பிடுவாா்கள். அந்தப் பெயா்கள் அரசின் பட்டியலில் இருக்காது. அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவா் ஜாதியை தோ்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு, தெலங்கானா அரசு மிகச் சிறப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலங்கானா அரசின் மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

மற்றொரு அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பீட்டா் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினா்களாக கே.சிரஞ்சீவி, கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா, எஸ்.டி.நெடுஞ்செழியன், ஆா்.எம்.பழனிசாமி, வி.ஆா்.சிவராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.