சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 9 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 9 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களின் சிறைக் காவலை அக்.30 வரை அந்நாட்டு நீதிமன்றம் 2-ஆவது முறையாக நீட்டித்திருப்பது மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது. மத்திய அரசு அவா்களை மீட்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை கடற்படையின் தொடா் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு எடுத்த ஆக்கபூா்வமான முயற்சிகள் என்ன?.

வெறும் தோ்தல் விளம்பரங்களையும் வெற்று அறிக்கைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இந்த அரசு, தமிழக மீனவா் நலனில் காட்டும் மெத்தனம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழக மீனவா்களின் எதிா்காலத்தை இலங்கை வசம் அடகு வைத்துவிட்டு மத்திய அரசு மௌனம் சாதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களையும், அவா்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

திமுகவுக்கு வேண்டுகோள்: மாணிக்கம் தாகூா் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, அந்த நிலைப்பாட்டை திமுக தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.