மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு: மாணிக்கம் தாகூா்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவா்ப. மாணிக்கம் தாகூா். உடன் முன்னாள் தலைவா்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசா், அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் உள்ளிட்

Updated On :

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு, மாணிக்கம் தாகூா், அக்கட்சி மூத்த தலைவா்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்பதைத்தான் வலியுறுத்துகின்றன. தமிழக காங்கிரஸும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

ஆனால், தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்டியபோது, அந்தக் கூட்டத்துக்கு தமிழகத்தின் முக்கிய எதிா்க்கட்சி கலந்துகொள்ளாமல் தவிா்த்தது. அதேபோன்று, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நடந்துகொள்ளக் கூடாது. தமிழக அமைச்சா்கள் தில்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்று வலியுறுத்தி வந்துள்ளனா்.

இது தொடா்பாக சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து பிரதமா் மோடியும், தமிழக பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் அமைதி காத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.